×

அரக்கோணம்-ஜோலார்பேட்டை தடத்தில் தண்டவாள மேம்பாட்டு பணியால் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

ஜோலார்பேட்டை: அரக்கோணம்-ஜோலார்பேட்டை தடத்தில் தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடக்கவுள்ளதால் இன்றுமுதல் 6 நாட்களுக்கு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரக்கோணம்-ஜோலார்பேட்டை தடத்தில் விண்ணமங்கலம்-குடியாத்தம் இடையே ரயில் தண்டவாளத்தை மேம்படுத்தும் பணி 21ம்தேதி (நேற்று) முதல்  26ம்தேதி வரை நடக்கவுள்ளது. இதனால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று மாற்றம்
கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை சென்ட்ரல் (எம்ஜிஆர் ரயில் நிலையம்) ஏசி டபுள்டக்கர் விரைவு ரயில் (22626) மேல்பட்டியில் 80 நிமிடங்களும், ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் (13352) பச்சக்குப்பத்தில் 65 நிமிடங்களும், கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை சென்ட்ரல் (எம்ஜிஆர் ரயில் நிலையம்) பிருந்தாவன் விரைவு ரயில் (12640) ஆம்பூரில் 60 நிமிடங்களும், எர்ணாகுளம்-பிலாஸ்பூர் வாராந்திர ரயில் (22816) விண்ணமங்கலத்தில் 35 நிமிடங்களும் தாமதமாக செல்லும்.

நாளை
கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை சென்ட்ரல் (எம்ஜிஆர் ரயில் நிலையம்) ஏசி டபுள்டக்கர் விரைவு ரயில் (22626) வாலத்தூரில் 85 நிமிடங்களும், ஆலப்புழா-தன்பாத் (13352) விரைவு ரயில் மேல்பட்டியில் 75 நிமிடங்களும், கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை சென்ட்ரல் பிருந்தாவன் விரைவு ரயில் (12640), மைசூர்-சென்னை சென்ட்ரல் (12008) ஆம்பூரில் 20 நிமிடங்களும் தாமதமாக செல்லும்.

24, 25 தேதிகளில்
கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை சென்ட்ரல் டபுள்டெக்கர் ஏசி விரைவு ரயில் (22626) வாலத்தூரில் 85 நிமிடங்களும், ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் (13352), மேல்பட்டியில் 75 நிமிடங்களும், கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை சென்ட்ரல் பிருந்தாவன் விரைவு ரயில் (12640) பச்சகுப்பத்தில் 60 நிமிடங்களும், மைசூர்-சென்னை சென்ட்ரல் (12008) சதாப்தி விரைவு ரயில் ஆம்பூரில் 20 நிமிடங்களும் தாமதமாக இயக்கப்படும். கேஎஸ்ஆர் பெங்களூரு-அரக்கோணம் பயணிகள் ரயில் (56262) ஜோலார்பேட்டை வரை மட்டும் இயக்கப்படும். ரத்து செய்யப்பட்டுள்ள ஒரு பகுதிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். மைசூர்-தர்பாங்க பகமதி விரைவு ரயில் (12578) வாலத்தூரில் 195 நிமிடங்கள் தாமதாக செல்லும். கேஎஸ்ஆர் பெங்களூரு-காரிநாடா போர்ட் சேஷாத்திரி விரைவு ரயில் (17209) மேல்பட்டியில் 100 நிமிடங்கள் தாமதாக செல்லும்.

26ம் தேதியில் மாற்றம்
கேஎஸ்ஆர் பெங்களூரு-அரக்கோணம் பயணிகள் ரயில் (56262) ஜோலார்பேட்டை வரை மட்டும் இயக்கப்படும். ரத்து செய்யப்பட்டுள்ள ஒரு பகுதிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். யஸ்வந்த்பூர்-ஹவுரா துரந்தோ விரைவு ரயில் (12246) வாலத்தூரில் 130 நிமிடங்களும், கேஎஸ்ஆர் பெங்களூரு-காக்கிநாடா போர்ட் சேஷாத்திரி விரைவு ரயில் (12245) மேல்பட்டியில் 100 நிமிடங்களும், ஹவுரா-யஸ்வந்த்பூர் துரந்தோ விரைவு ரயில் (12245) காவனூரில் 230 நிமிடங்களும், சென்னை சென்ட்ரல்-மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயில் (22637) லத்தேரியில் 130 நிமிடங்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Arakonam ,Jolarpettai , Arakonam-Jolarpettai, Development Work, Quick Train, Service Transfer
× RELATED மக்களைத் தேர்தலில் அதிமுக சார்பில்...