×

லண்டனில் தொடங்கிய மலர் கண்காட்சி.... இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பார்வையிட்டார்

லண்டன்: லண்டனில் தொடங்கிய மலர் கண்காட்சியை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பார்வையிட்டார். வசந்த கால மலர் கண்காட்சி எனப்படும், செல்சி மலர் கண்காட்சியானது ஆண்டுதோறும், மே மாதம் நடைபெறும். இந்த மலர் கண்காட்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். செல்சி மலர் கண்காட்சியில் விதவிதமாக அலங்காரம் செய்து வைக்கப்பட்டு உள்ள மலர்களை மக்கள் கண்டு ரசிப்பர். செல்சி மலர் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டது. இதற்கு முன்னதாக நேற்று அங்கு சென்ற ராணி, தோட்ட பராமரிப்பாளர்களை சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

அத்துடன், பல்வேறு வகையான மலர்கள் மற்றும் மரத்தினால் செய்யப்பட்ட கலைநயமிக்க பொருட்களை கண்டு ரசித்தார். அப்போது மலர்களின் தனித்துவம் குறித்து ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி கேத் மிடில்டனும் உடன் சென்றனர். முன்னதாக, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் அவர்களின் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.இதை தொடர்ந்து, தோட்டக்கலை நிபுணர்களுடன் இணைந்து கேத் உருவாக்கிய பூங்காவையும் அரசு குடும்பத்தினர் பார்வையிட்டனர்.


Tags : Elizabeth II ,flower exhibition ,England ,London , London, Flower Exhibition, Elizabeth II
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்