×

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து போலீசாரை நெகிழவைத்த ஸ்னோலினின் தாய்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22ம் தேதி  நடந்த 100-வது நாள் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். அதில் 18 வயதே ஆன ஸ்னோலினும் ஒருவர். வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர் ஸ்னோலின். அவரின் கனவு பொய்த்துப்போன தினமும் இன்றுதான்.

துப்பாக்கிச்சூட்டில் ஸ்னோலின் கோரமாக வாயில் சுட்டு கொல்லப்பட்டார்.  ஸ்னோலினின் முதலாமாண்டு நினைவேந்தலுக்காக அவரது தாய் அழைப்பிதழை அச்சிட்டுள்ளார். அதில், வீட்டுக்காக 2000ல் பிறந்த ஸ்னோலின், நாட்டுக்காக 2018-ல் மறைந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்னோலின் நினைவேந்தல் நிகழ்ச்சியை அருகில் உள்ள சர்ச்சில் நடத்த அவரது தாய் வனிதா முடிவு செய்துள்ளார்.

இதற்காக அப்பகுதி மக்கள், அரசு அதிகாரிகள், போலீஸ்காரர்கள் என ஏராளமானோரை அழைத்துள்ளார். நினைவேந்தல் நிகழ்ச்சி குறித்து ஸ்னோலினின் தயார் வனிதா கூறுகையில், நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அரசு அதிகாரிகள், போலீஸ்காரர்களையும் அழைச்சிருக்கேன். அவுங்கள மன்னிச்சிட்டேன். அன்பு மட்டும்தான் நிஜம்னு என்னோட ஸ்னோலின் சொல்லுவா. அவளுக்காக, அவளுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Tags : Sterlite ,Snowlin ,event , Sterlite, gunfire, police, snowlin,
× RELATED காஷ்மீரில் நள்ளிரவு முதல் சர்வதேச எல்லையில் பாக். துப்பாக்கிச்சூடு