×

தனக்கும் தனது கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் வாக்காளர்களுக்கு நன்றி: மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இராணி டுவிட்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 24 மணி நேரமே இருக்கிறது, தனக்கும் தனது கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் வாக்காளர்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இராணி நன்றி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் கடந்த 19-ம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை வெளியாகின. இதில், தமிழகத்தில் திமுக கூட்டணி 29 இடத்திற்கு மேல் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 280-300 இடங்களை பிடிக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இதில் தமிழகத்தில் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடந்த 19-ம் தேதி மாலை வெளியிடப்பட்டன. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத்தில் பாஜ அமோக வெற்றி பெறும் என்றே கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கும் தனது கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் வாக்காளர்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “இன்னும் 24 மணி நேரமே உள்ளது... நாளை நம்மில் பலரும் வாக்கு எண்ணிக்கையை நொடிக்கு நொடி அறிந்துகொள்ள டிவி முன்னர் அமர்ந்திருக்கும் சூழலில், எனக்கும் என் கட்சிக்கும் எண்ணிலடங்கா ஆதரவு அளித்த நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகப் போட்டியிடுகிறார் பாஜக-வின் ஸ்மிருதி இராணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : voters ,Smriti Irani Dwitt ,party , He and his party, voters, thanks, federal minister Smriti Irani, Tuitt
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...