×

மேற்குத் தொடர்ச்சி மலைபகுதிகளில் பலா விளைச்சல் அமோகம்

* வாசனைக்கு காட்டு யானை வர வாய்ப்பு

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள நிலங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் பலா மரங்களில் பலா காய்கள் காய்க்க துவங்கி உள்ளன. திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களிலும் உள்ள மாமரங்களில் மாம் பழங்கள் காய்த்துத் தற்போது அறுவடை ஆகிக்கொண்டிருக்கிறது.

அதேபோல் அப்பகுதியில் உள்ள பலா மரங்களில் தற்போது பலா காய்கள் அதிகளவில் காய்த்துத் தொங்குகின்றன. இந்த வருடம் அமோகமாக பலா பழங்கள் அதிகம் காய்ந்துள்ளதால் விவசாயிகள் திருவில்லிபுத்தூர் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளுக்கும் வியாபாரிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கூறும்போது, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் விவசாய நிலங்களில் உள்ள பலா மரங்களில் காய்கள் அதிகமாக காய்த்துள்ளன. அந்த பலா பழங்கள் மரத்திலேயே பழுத்துள்ளதால் காற்றின் திசைக்கு ஏற்ப வெகு தூரத்திற்கு பலா வாசனை அடித்துக் கொண்டிருக்கிறது. பலா பழத்தின் வாசனையால் காட்டு யானைகள் தோட்டப்பகுதிக்கு வர வாய்ப்புள்ளது என்றார்.

Tags : Western Ghats , Western Ghats , jack yield, forest elephants,
× RELATED கன்றுக்குட்டியை தாக்கி கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்