தமிழ்நாட்டில் 45 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு கூறியுள்ளார். நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார். செல்போன் செயலி மூலம் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் 88 பேர் தமிழகம் வந்துள்ளனர்.  திருவள்ளூரில் அதிகபட்சமாக 34 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். 19 கம்பெனி துணை ராணுப்படையின் 1,520 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று  அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 36 அயிரம் காவலர்கள், துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று சாகு அறிவித்துள்ளார்.

குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை  நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே ஒப்புகைச்சீட்டு எண்ணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 45 மையங்களில் 4014 விடியோ கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெப் கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படும் என்று சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். ஒரு சுற்று வாக்கு எண்ணி முடிக்க சுமார் 30 நிமிடங்கள் ஆகும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 17,128 அரசு அலுவலர்கள் வாக்கு எண்ணக்கையில் ஈடுபடுவர் என்று  அவர் கூறியுள்ளார். 5 சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

Related Stories:

>