×

மக்களவை தேர்தலின் தேர்தல் முடிவுகள் நாளை,..எந்த தொகுதியில் எத்தனை சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்?,..

சென்னை: தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது எந்த எந்த தொகுதிகளில் எத்தனை சுற்று வாக்குகள் எண்ணப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி  மக்களளை தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து 4 தொகுதிகளுக்கான  இடைத்தேர்தல் மே 19-ம் தேதி சட்டமன்ற நடந்தது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தோடங்கி மே 19ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் அனைத்து கட்ட தேர்தல் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை தொடந்தவுள்ளது.  

alignment=


எல்லாம் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை சில சுற்றுகளாக நடக்கும். காலை முதல் இரவு வரை கூட வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஒருவித கணக்கை வைத்து நடைபெறுது. ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை என்பது 14 பூத்துகள் ஆகும். ஒரு தொகுதியில் 14 பூத்துகள் இருந்தால் ஒரு சுற்றிலேயே தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். 14 பூத்துக்கள் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு காரணம் உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேசைகள் போடப்படுகிறது. ஒவ்வொரு மேசைக்கும் ஒரு பூத்து வீதம் 14 மேசைக்கு 14 பூத்துகள் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் தான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

திருவள்ளூரில் 34 சுற்றுகளாகவும் ,கோவையில் 30 சுற்றுகள் எண்ணப்படும். மேலும்  திருச்சியில் 25 சுற்றுகள் , தருமபுரியில் 23 , வடசென்னையில் 22 சுற்றுகள், தென் சென்னை மற்றும் தூத்துக்குடியில் தலா 21 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது- மத்திய சென்னையில் வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகள் நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றன.


Tags : Lok Sabha ,rounds ,constituency , Lok Sabha election, election results, vote count
× RELATED சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு ஏற்பு