×

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் ஒப்பந்தத்தில் ஒருபகுதியாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீண்டும் வரைவு மசோதா தாக்கல்

லண்டன்: பிரெக்ஸிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக பிரதமர் தெரசா மே மீண்டும் ஒரு வரைவு மசோதாவை தாக்கல் செய்துள்ளார். 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து  பிரிட்டன் வெளியேற அந்த நாட்டு மக்கள் வாக்களித்தனர். பிரிட்டன் வெளியேற நான்கு  ஆண்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 29-ம் தேதியுடன் இந்த கால அவகாசம் முடிவுக்கு வந்தது. ஆனால் அதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவு மசோதாவை மூன்று முறை தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோற்கடித்துவிட்டனர்.

தற்போது 4 வது முறையாக வரைவு மசோதாவை தெரசா மே தாக்கல் செய்துள்ளார். இந்த முறை கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் கட்சி எம்பிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரசா மே கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ஜெர்மி கார்பின் அதனை ஏற்க மறுத்துவிட்டார். பிரிட்டனின்  எதிர்க்கால நலனை பாதுகாக்கும் வகையில் ஐரோப்பிய யூனியனுடன் ஒரு நிரந்த ஒப்பந்தத்துடன் வெளியேற வேண்டும் என்பது பெரும்பாலன எம்பி-க்களின் கோரிக்கையாகும். இந்த நிலையில் ஏப்ரல் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட கால அவகாசமும் முடிவடைந்துவிட்டதால் மீண்டும் கால அவகாசம் கேட்க தேரசா மே முடிவு செய்துள்ளார்.


Tags : Teresa Mae ,Britain ,EU , European Union, exit deal, British Prime Minister, Theresa May, draft bill
× RELATED இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து...