×

வரகளியாறு கிரால் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள சின்னதம்பி யானையை வெளியே கொண்டுவர வனத்துறை நடவடிக்கை: பாகன்கள் மூலம் தீவிர பயிற்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த வரகளியாறு முகாமில் அடைக்கப்பட்ட சின்னதம்பி யானைக்கு தீவிர  பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்னும் 2 வாரத்தில், கூண்டிலிருந்து வெளியே கொண்டுவர முடிவு செய்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை அருகே பிடிபட்ட சின்னதம்பி யானை, கடந்த 25.1.19-ம் தேதியன்று கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பின், பொள்ளாச்சியை அடுத்த வரகளியாறுவில் விட்டனர்.

அங்கு கிரால் என்ற மரத்தாலான கூண்டில் அடைக்கப்பட்டுள்ள சின்னதம்பியை, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இன்னும் சில வாரங்களில் சின்னத்தம்பியை கிராலில் இருந்து வெளியேற்றி, கோழிக்கமுத்தி முகாமுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வரகளியாறு முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள சின்னதம்பிக்கு தினமும் 2 வேளை சோளம், பசுந்தீவனம் அடங்கிய சத்தான உணவுகளும், தென்னை ஓலை, கரும்பு உள்ளிட்ட உணவுகளும் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே மனிதர்களுடன் நன்கு பழக்கப்பட்ட சின்னதம்பி, பாகன்களிடம் முரண்டு பிடிக்காமல், கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிடுகிறது. அதற்கு, பாகன்கள் மூலம் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்னும் இரண்டு வாரத்திற்குள் சின்னதம்பி யானை, கூண்டிலிருந்து வெளியே கொண்டுவரவும், கோழிக்கமுத்தி முகாமில் உள்ள, பிற வளர்ப்பு யானைகளுடன் நடமாடவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றனர்.

Tags : Chinnathambi , Cranes, Cage, Chinnathambi Elephant, Forest, Action, Pagans, Extreme Training
× RELATED கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்