×

பதிவுத்துறை ஐஜியாக முருகானந்தம் பொறுப்பேற்பு

சென்னை: தொழில்துறை செயலாளர் முருகானந்தத்திடம் பதிவுத்துறை ஐஜி பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறை ஐஜி குமரகுருபரனை பேரிடர் மேலாண்மை ஆணையராக பணியிட மாற்றம் செய்து கடந்த பிப்ரவரி 15ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து, பதிவுத்துறை ஐஜி பொறுப்பு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பாலச்சந்திரனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் வணிகவரித்துறை செயலாளர் பாலச்சந்திரன் 15 நாட்களுக்கு விடுப்பில் சென்றுள்ளார். இதை தொடர்ந்து, தொழில்துறை செயலாளர் முருகானந்தத்திடம் பதிவுத்துறை ஐஜி பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வரும் ஜூன் 3ம் தேதி வணிகவரித்துறை செயலாளர் பாலச்சந்திரன் மீண்டும் பணிக்கு திரும்புகிறார் என்று பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Muruganantham ,Registration Agency , Registration IG, Muruganantham, Commitment
× RELATED ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட பெண்ணை...