தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட்டை தாண்டியது...வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட்டை தாண்டியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருத்தணி, கரூர் பரமத்தியில் 108 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. மதுரை தெற்கு, திருச்சி 106, மதுரை 105, சேலம் 104, நாமக்கல் 102 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: