களத்தில் தனது முடிவுகள் தவறாகும் போதெல்லாம் தோனி தானாக முன்வந்து சரியான ஆலோசனை தருவார்: யுஸ்வேந்தர் சாஹல்

டெல்லி: களத்தில் தனது முடிவுகள் தவறாகும் போதெல்லாம் தோனி தானாக முன்வந்து சரியான ஆலோசனை தந்துள்ளதாக யுஸ்வேந்தர் சாஹல் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்தர் சாஹல் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில், தனது முதல் போட்டி முதல் தற்போது வரை களத்தில் தான் தவறான முடிவுகளை எடுக்கும் போதெல்லாம் மூத்த வீரர் எம்.எஸ். தோனி அவராக முன்வந்து சரியான ஆலோசனை கொடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தோனியின் அறிவுரைகள் எப்போதும் தனக்கு உதவி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் எப்போதும் தோனியின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பதாகவும், என்ன நடந்தாலும் தோனி தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் டோனியின் ஆலோசனையை இந்திய அணியின் அனைத்து வீரர்களும் கேட்பார்கள்  எனவும் தெரிவித்தார்.


Tags : Dhoni ,Uswandar Sahal , Dhoni ,give ,right advice,decisions fail, field,Uswandar Sahal
× RELATED மது போதையில் பேருந்து இயக்குவதை...