தேர்தலில் பதிவான வாக்குகளை 100 சதவீதம் ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பிட உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான முடிவுகள் வருகிற மே 23-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முந்தய தேர்தல்களைப்போல் இல்லாமல் இந்தாண்டு புதிதாக விவிபேட் பயன்படுத்தப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் விவிபேட் இயந்திரத்தில் ஒப்புகைச்சீட்டாக பதிவாகும்.

இந்த ஒப்புகைச்சீட்டுகளை முழுமையாக எண்ணக்கோரி 21 எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பிட உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க வாய்ப்பில்லை, அது தொல்லையாக முடியும் எனக்கூறி வலக்கை தலுப்படு செய்தனர்.

× RELATED நடிகர் சங்கத்தேர்தல்: இதுவரை 1,460 வாக்குகள் பதிவு