×

முதல்வர் பேட்டிக்கு எதிர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 8 வழி சாலை திட்டத்துக்கு 7 சதவீதம் பேரே எதிர்ப்பு அவர்களும் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார். இதை தொடர்ந்து முதல்வரின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி  வட்டம் புதுப்பட்டி கிராமத்தில் 8 வழி சாலை எதிர்ப்புக் குழுவினர் நேற்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், எங்கள் உயிரே போனாலும் விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன்பு ஒரு சொல்லும், தேர்தலுக்கு பின்பு ஒரு சொல்லும் மாறி மாறி பேசுகின்றனர். எனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

Tags : Protesters ,demonstration ,CM , Chief Minister interviewed, protesters, farmers, demonstrated
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...