×

எய்பாருடன் பார்சிலோனா டிரா

ஸ்பெயினில் நடைபெற்று வந்த லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 2-2 என்ற கோல் கணக்கில் எய்பார் அணியுடன் டிரா செய்தது. அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி 31வது மற்றும் 32வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார்.

எய்பார் சார்பில் குகுரெல்லா 20வது நிமிடத்திலும், டி பிளாசிஸ் 45வது நிமிடத்தில் கோல் போட்டனர். மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பார்சிலோனா அணி ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துவிட்டிருந்தது. 38 லீக் ஆட்டங்களில் அந்த அணி 87 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. அத்லெடிகோ மாட்ரிட் (76), ரியல் மாட்ரிட் (68), வேலன்சியா (61) அணிகள் அடுத்த இடங்களைப் பிடித்தன. எதிரணி கோல் கீப்பரின் தலைக்கு மேலாக பந்தை பறக்கவிட்டு கோல் போடுகிறார் மெஸ்ஸி.

Tags : Barcelona , Barcelona draw with Ebrah
× RELATED பார்சிலோனாவில் இருந்து மெஸ்ஸி விலகுவது உறுதி