×

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குற்றவாளியை நாடு கடத்த எகிப்துக்கு இந்தியா கோரிக்கை

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடிக்கும் அந்த வங்கிக்கும் இடையே தரகராக செயல்பட்ட சுபாஷ் பரப் எகிப்து நாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை கெய்ரோ புறநகர் பகுதி ஒன்றில் நீரவ் மோடியின் கூட்டாளிகளான தமீர் மற்றும் முகமது ஆகிய இரண்டு எகிப்து பிரஜைகள் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த மே 8ம் தேதி லண்டன் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க மூன்றாவது தடவையாக மறுத்தபோது அவருடைய வழக்கறிஞர்கள் சுபாஷ் பரப் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதை மறுத்தனர்.

சுபாஷ் பரப் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அங்கே தங்கி இருப்பதாக நீதிமன்றத்தில் கூறினர். சர்வதேச போலீஸ் சுபாஷ் பரப்புக்கு எதிராக ெரட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்ததை தொடர்ந்து அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி இந்திய அதிகாரிகள் கடந்த 2018ம் ஆண்டு எகிப்து அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் சுபாஷ் பரப்பை நாடு கடத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி இந்திய அதிகாரிகள் தற்போது எகிப்தை கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் அவர் விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளது.


Tags : India ,Egypt ,Punjab National Bank , Punjab National Bank fraud India requests Egypt to extradite guilty
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!