×

ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்

துபாய்: பாலைவனம் நிறைந்த ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடர் மழை கிடையாது, பெரிய ஆறுகள் கிடையாது  ஆனாலும் ஆண்டுதோறும் விவசாயம்  வளர்ச்சியடைந்து வருகிறது கடந்த ஆறு மாதங்களில் இயற்கை விவசாய பண்ணைகள் 59 சதவீத அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலும் பாலைவன பூமிதான். ஆனால், இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹெக்டரில் விவசாயம் செய்யப்படுகிறது என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். 1971ம் ஆண்டில் 4000  விவசாயப் பண்ணைகள் இருந்தன. இது  2011 கண்கெடுப்பின்படி 35,704 என அபரிமிதமாக வளர்ந்து நிலையில் தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ராசல் கைமா, அல் அய்ன், புஜைரா போன்ற பகுதிகளில் விவசாய பண்ணைகளில் கத்தரிக்காய், வெள்ளரிக்காய்,  தக்காளி, மிளகாய், பீட்ரூட் மற்றும்  கிழங்கு என பல்வேறு வகை காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது.
பாலைவன பகுதிகள் விவசாயத்திற்கு கடினமானவை என்பதால், தொழில்நுட்பங்களை பயன்படுத்தப்படுகிறது.

இதனால் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. இதனை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதோடு விவசாய‌ வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக விதைகள், உரங்கள், கருவிகள் ஆகியவை மானிய விலையில் அளிக்கப்படுகிறது மேலும் யுஏஇ.யில் கடந்த 6 மாதங்களில் இயற்கை விவசாய பண்ணைகள் 53 சதவீதம் உயர்ந்துள்ளது. இயற்கை விளைப் பொருட்கள் வகைகள் 2019 காலாண்டில் 1,240 ஆக இருந்து 2019 காலாண்டில் 2,356 ஆக உயர்ந்துள்ளது. இது 89 சதவீத வளர்ச்சியாகும். இன்றும் 90 சதவீத பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து யுஏஇ.க்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது இயற்கை விவசாய பண்ணைகளில் உற்பத்தி அதிகரிப்பதின் மூலம் 40 சதவீதம் வரை உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளதாக நம்பபடுகிறது. பாலைவன பூமியில் நடக்கும் இந்த விவசாயப் புரட்சி பல்வேறு நாடுகளால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

Tags : Natural Farms ,United Arab Emirates , In the United Arab Emirates Natural Farms: The Desert on the Desert Earth
× RELATED கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!