×

வாக்குப்பதிவுக்கு பின்பு நடத்திய சர்வே அடிப்படையில் முந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் என்னாச்சு?

புதுடெல்லி: வாக்குப்பதிவுக்கு பின்பு நடத்தப்படும் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் முடிவில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், 1998 முதல் 2014ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளும், தேர்தல் முடிவுகளும் குறித்த புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் 17வது நாடாளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் வெளியான சில ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜ கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன. கடந்த தேர்தல்களில் ஒப்பிட்டு பார்க்கும் போது பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் எதிர்பார்த்தபடி இல்லை. மாறாக தவறுதலாகவும் முடிந்துள்ளது.

அதனால், வாக்குப் பதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. பொதுவாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்பது, வாக்காளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வாக்களித்த பிறகு வெளியிடப்படும் கருத்துக் கணிப்பாகும். எந்த அரசு ஆட்சியை அமைக்கப் போகிறது என்பது குறித்து இதில் கணிக்கப்படும். தேர்தலுக்கு முன்பு, வாக்காளர்களிடம் ‘யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? என்று கேட்கப்படும், ஆனால் இதில், ‘யாருக்கு வாக்களித்தீர்கள்?’ என்று கேட்டு, அதற்கு ஏற்றவாறு முடிவுகள் வெளியிடப்படும். பல நிறுவனங்களின் சார்பில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஆறு தேசிய கட்சிகள் மற்றும் 18 மாநில கட்சிகளின் ஒப்புதலோடு, சட்டத்துறை அமைச்சகத்திடம் ஒட்டுமொத்தமாக தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கை ஏற்கப்பட்டாலும், பிப்ரவரி 2010ம் ஆண்டு வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு மட்டும் பிரிவு 126(A) படி தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், கருத்துக் கணிப்புகள் ஒரு சார்பாக இருப்பதாகவும், போட்டியாளர்களுக்கு எதிராக வேண்டுமென்றே தவறான கணிப்புகளை கொடுப்பதாகவும் என்று அரசியல் கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

நடப்பு தேர்தலில், மே 19 மாலை வரை வாக்குப்பதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை அமலில் உள்ளது. 11.04.2019 காலை 7 மணியிலிருந்து, 19.05.2019 மாலை 6.30 மணி வரை, மின் ஊடகம், அச்சு ஊடகம் வெளியிட அனுமதி இல்லை. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் இந்தியாவில் நம்பகத்தன்மை அற்றவை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. பல முறை தேர்தல் முடிவுகள் தவறாக கணிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச அறிக்கைகள் கூறுகின்றன. இந்நிலையில், 1998 முதல் 2014ம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களின் கருத்துக்கணிப்பு முடிவு மற்றும் தேர்தல் முடிவு குறித்த அலசல் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில், ‘தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம். அது வாக்கு இயந்திரங்களை மாற்றி, தில்லுமுல்லு செய்யும் முயற்சி’ என்று மேற்குவங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆந்திர மாநிலம் குண்டூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், ‘‘எனது பங்களிப்பு இல்லாமல் இந்த தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இப்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த ‘எக்சிட் போலை’ நம்பாமல், ‘எக்ஸாட் போலை’ நம்புங்கள்; அதாவது நிஜ தேர்தல் முடிவுகளை நம்புங்கள்’’ என்றார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அளித்த பேட்டியில், ‘‘கருத்துக்கணிப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது. மக்கள் யாரைத் தேர்வு செய்துள்ளனர் என்பது மே 23ம் தேதி தெரிந்துவிடும். அந்த முடிவின்படி செயல்படுவோம்’’ என்றார்.

1998ல் பாஜ கூட்டணி ஆட்சி
செய்தி நிறுவனம்    பாஜ கூட்டணி    காங். கூட்டணி    மற்ற கட்சிகள்
அவுட்லுக்/ஏசிஎன்    238                       149                      156
டிஆர்எஸ்    249    155                        139
பிரண்ட்லைன்/சிஎம்எஸ்    235      155                      182
இந்தியா டுடே/
சிஎஸ்டிஎஸ்    214                        164                      165
தேர்தல் முடிவு    252                        166                      119

1999ல் பாஜ கூட்டணி ஆட்சி
செய்தி நிறுவனம்    பாஜ கூட்டணி    காங். கூட்டணி    மற்ற கட்சிகள்
இந்தியா டுடே/இன்சைட்    336    146                      80
ஹெச்டி-ஏசிஎன்                     300    146                      95
அவுட்லுக்/சிஎம்எஸ்                     329    145                      39
டைம்ஸ்போல்/
டிஆர்எஸ்    332                     138    -
தேர்தல் முடிவு                     296    134                      113

2014ல் பாஜ கூட்டணி ஆட்சி
செய்தி நிறுவனம்    பாஜ கூட்டணி    காங். கூட்டணி    மற்ற கட்சிகள்
ஏபிபி                        281                      97                         165
டைம்ஸ் நவ்-
ஓஆர்ஜி                        249                     148                         146
சிஎன்என்-
ஐபிஎன்                        280                      97                         166
ஹெட்லைன்ஸ் டுடே 272                          115                         156
சாணக்கியா     340                      70                         133
இந்தியா டிவி/
சி-ஓட்டர்                       289                      101                          153
என்டிடிவி                       279                      103                          161
தேர்தல் முடிவு    336                       59                           148

2004ல் காங். கூட்டணி ஆட்சி
செய்தி நிறுவனம்    பாஜ கூட்டணி    காங். கூட்டணி    மற்ற கட்சிகள்
அவுட்லுக்-
எம்டிஆர்ஏ    290                       169                         99
அஜய்டாக்-
ஓஆர்ஜி                      248                        190                        105
என்டிடிவி/எக்ஸ்பிரஸ்       250                         205                        120
ஸ்டார்/சி-ஓட்டர்    275                        186                         98
தேர்தல் முடிவு    189                         222                        132

2009ல் காங். கூட்டணி ஆட்சி
செய்தி நிறுவனம்    பாஜ கூட்டணி    காங். கூட்டணி    மற்ற கட்சிகள்
ஸ்டார் நியூஸ்/
ஏசிஎன்                     197                        199                       136
டைம்ஸ் நவ்    183                        198                       162
என்டிடிவி          177                        216                       150
ஹெட்லைன்ஸ்
evடுடே                       180                        191                         172
தேர்தல் முடிவு    159                         262                           79

2019ல் எந்த கூட்டணி ஆட்சி?
செய்தி நிறுவனம்    பாஜ கூட்டணி    காங். கூட்டணி    மற்ற கட்சிகள்
டைம்ஸ் நவ்/விஎம்ஆர்    306             132                        104
ரிபப்ளிக் - சி-ஓட்டர்              287             128                         117
நியூஸ் எக்ஸ் நேட்டா    298             118                         127
என்டிடிவி போல்ஸ்                      298             128                         116
சுவர்ணா நியூஸ்                  295-315        122-125    102-125
நியூஸ் நேசன்                  282-290        118-126    130-138
ஜன்ஹிபாட்                  295-315         122-125    102-125
டுடே சாணக்கியா                      340               70                           133
விபிடி                                        333              115                             94
நியூஸ் எக்ஸ்                      242              162                           136
ஏபிபி நியூஸ்                      267              127                           148
டைம்ஸ் ஆப் இந்தியா    306              152                          84
நியூஸ் 18/ சிஎன்என்       336               82                           124
தேர்தல் முடிவு                                                 23ம் தேதி தெரியும்

Tags : Voting, polling, election
× RELATED நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம்...