×

கருத்துக்கணிப்புகளை திமுக ஒருபோதும் பொருட்படுத்தாது : திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

சென்னை : கருத்துக்கணிப்புகளை திமுக ஒருபோதும் பொருட்படுத்தாது என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். 3 நாட்களில் தெரிய போகும் மக்களின் கணிப்புக்காக காத்திருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசில் திமுக அங்கம் வகிக்குமா என்பதை 23ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தாம் தெரிவிப்பதாக ஸ்டாலின் கூறினார். மேலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் திமுகவிற்கு சாதகமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஊடகங்களில் வெளியாகும் கருத்து கணிப்புகள் சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துதில்லை என்று ஸ்டாலின் பதில் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து மே 23ம் தேதி டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, வரும் 23ம் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது என யார் சொன்னது என ஸ்டாலின் எதிர்கேள்வி எழுப்பினார்.மேலும் திமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மே 23ம் தேதிக்கு பின் முடிவெடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி தமிழ்நாட்டில் திமுக கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. திமுக கூட்டணி 30 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Stalin ,DMK ,talks , Opinion polls, stalin, DMK, coalition
× RELATED திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!