ராஜஸ்தானில் மூன்று சிறுமிகள் பாலியல் பலாத்காரம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மூன்று சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த மே 14-ம் தேதி அல்வர் கிராமத்தில் தனது உறவினரின் திருமணத்திற்குச் சென்றிருந்த 15 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவன் தப்பி சென்றான், மற்ற இரண்டு பேரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தாக்கியுள்ளனர். குடும்பத்தினர் தாக்கியத்தில் ஒருவர் உயிரிழனார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் சகோதரர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பெரில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுருவில் 6 வயது சிறுமியை அவரது உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளி அன்று அந்த சிறுமி தண்ணீர் எடுக்க சென்றிருந்தார். அப்போது அவரது உறவினர் (14 வயது சிறுவன்) அந்த சிறுமியை தனி இடத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். மற்றொரு சம்பவத்தில், ராஜஸ்தானின் தோல்பூர் கிராமத்தில் கடந்த வியாழன் அன்று 8 வயது சிறுமியை 18 வயது இளைஞர் பலாத்காரம் செய்துள்ளார்.


Tags : girls ,Rajasthan , Rajasthan , Three , Rape Cases
× RELATED உண்மை, சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட...