×

காட்டு மன்னார் கோவில் அருகே அப்துல் ரஷீத் என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கடலூர் : கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் அப்துல் ரஷீத் என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாத அமைப்புடன் ரஷீதுக்கு தொடர்பு இருப்பதாக வந்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் படி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த அதிகாரிகள் ரஷீத் வீட்டில் 4 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர்.

அவரது வீட்டில் இருந்த மடிக்கணினி மற்றும் அவர் பயன்படுத்திய 7 செல்போன்கள், 4 பென்ட்ரைவ்கள், 8 சிம்கார்டுகள் போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர். ஐஎஸ்ஐ அமைப்பின் கூட்டத்தில் ரஷீத் 2 முறை கலந்து கொண்டதற்கான ஆதாரங்கள் இருந்ததால் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியது காட்டு மன்னார் கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


Tags : NIA ,house ,Abdul Rashid ,temple ,Mannar , Wild Mannar temple, Abdul Rashid, NIA officials, tested
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்