×

வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு வந்த 1556 மது பாட்டில்கள் பறிமுதல்-நித்திரவிளை அருகே பரபரப்பு

நித்திரவிளை: நித்திரவிளை  அருகே பூத்துறை காருண்யபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க  வாகனத்தில் மது பதுக்கி வைத்திருப்பதாக நித்திரவிளை தனிப்பிரிவு ஏட்டு  ஜோஸ்க்கு தகவல் வந்தது. இதையடுத்து நித்திரவிளை இன்ஸ்பெக்டர் பட்டாணி  தலைமையில் போலீசார் அந்த வாகனத்தை சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும்  டிரைவர் தப்பி ஓடினார். போலீசார் வாகனத்தை சோதனை செய்தபோது, ஐஸ்  பெட்டிக்குள் சாக்கு மூட்டையில் பெட்டி பெட்டியாக டாஸ்மாக் குவார்ட்டர் மது  பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது.  போலீசார் வாகனத்துடன் மது  பாட்டில்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். சோதனையில் 32  அட்டை பெட்டிகளில் மொத்தம் 1556 குவர்ட்டர் மது பாட்டில்கள் இருந்தன.  தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாகனம் அகஸ்தீஸ்வரம் பகுதியை  சேர்ந்த ஒருவருடையது என்றும், தேர்தலையொட்டி நள்ளிரவில் வாக்காளர்களுக்கு  விநியோகம் செய்ய மது பாட்டில் கொண்டு வந்ததும் தெரியவந்தது.சம்பவம் குறித்து  தகவல் அறிந்து மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் நள்ளிரவில் நித்திரவிளை காவல்  நிலையத்திற்கு வந்தார். தொடர்ந்து விரைந்து செயல்பட்டு மது பாட்டில்களை  பறிமுதல் செய்த ேபாலீசாரை பாராட்டினார். நள்ளிரவில் போலீசாரிடம் சிக்கிய  மது பானத்தின் மதிப்பு ர.2 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கருங்கல்: குறும்பனை  அருகில் உள்ள ஒரு தோப்பில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஸ்  சாஸ்திரி தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது 493  குவார்ட்டர் மது பாட்டில்கள் பதுக்கி  வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீசார்  மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு வந்த 1556 மது பாட்டில்கள் பறிமுதல்-நித்திரவிளை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nithravila ,Nithravilai ,Nithravilai Division ,Karunyapuram ,Putura ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே வீட்டின் மீது சாய்ந்த தென்னை மரம்