×

நடிகர் விவேக் பேட்டி: விரைவில் அரசியல் பிரவேசம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில்  பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் விவேக் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சத்திற்கு அதிகளவு மரங்கள் வெட்டப்படுவதே காரணம். மலைப்பகுதிகளில் அதிகளவில் மரங்களை வெட்டுவதால், மலைகளின் இளவரசி கொடைக்கானலையும், அரசியான ஊட்டியையும் கிழவியாக மாற்றி  வருகிறோம். எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் விரைவில் அரசியலுக்கு வருவேன். ரஜினி அரசியலுக்கு வருவார். கமல்ஹாசனுடைய சர்ச்சை பேச்சு பற்றி எனக்கு தெரியாது. நான் அவருடன் எந்த படமும்  நடிக்கவில்லை என்று கூறினார்.


Tags : Vivek ,interview , Actor Vivek, interview, politics, entrance
× RELATED தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில்...