×

செல்போன் விளையாட்டு போதையால் வந்தவினை ‘பப்ஜி’ காதலன் தான் வேண்டும்... நீ வேண்டாம்’: கணவரிடம் விவாகரத்து கேட்கும் இளம்பெண்

காந்திநகர்: ‘பப்ஜி’ என்று அழைக்கப்படும் ஆன்லைன் செல்போன் விளையாட்டிற்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி உள்ளனர். பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் படிப்பை கூட சரியாக தொடராமல் நாள் தோறும் மொபைல்களில் பப்ஜி கேம்மை  விளையாடுவதை கண்டு பெற்றோர்கள் தினமும் வேதனையடைந்து வருகின்றனர். சமீபத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவன் ஒருவன், வினாத்தாளில் கேட்டப்பட்ட கேள்விக்கு பப்ஜி கேம் விளையாடு எப்படி என விடையளித்திருந்த சம்பவம்  இணையத்தில் வைரலாகியது. அதுமட்டுமில்லை பல்வேறு நகரங்களில் பப்ஜி கேம்மிற்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பப்ஜி கேம்மிற்கு அடிமையாகி போன திருமணமான 19 வயது பெண் ஒருவர், பப்ஜி காதலனுடன் சேர்ந்து  வாழ விரும்புவதாக கூறி கணவரிடம் விவகாரத்து கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் (18) ஒருவருக்கு, கட்டுமான தொழில் செய்து வரும் இளைஞருடன் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த பெண் கடந்த சில மாதங்களாக  பப்ஜி கேம்மிற்கு அடிமையாகி, செல்போனில் பப்ஜி கேம்மை விளையாடி வருவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். இவருக்கு, பப்ஜி விளையாட்டை சொல்லிக் கொடுத்த ஆண் நண்பர் ஒருவருடன், அந்த பெண்ணுக்கு காதலும் ஏற்பட்டது.  இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவரவே, தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வந்தது.  ஒருகட்டத்தில் குழம்பிபோன அந்த இளம்பெண், குஜராத்தில் இருக்கும் ‘அபயம்’ தொண்டு நிறுவனத்துக்கு போனில் தொடர்புக் கொண்டு தன்னுடன் பப்ஜி விளையாடும் ஆணுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், இதனால் தனது கணவரிடம்  இருந்து தனக்கு விவகாரத்து வாங்கி தருமாறும் கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்த பெண்ணை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து சில பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். மேலும், கணவருடன் விவாகரத்து பெற்று குடும்பத்தாரை  விட்டு பிரிவது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யவும் ஆலோசனை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : lover , Cell phone game addiction, babysitting, husband, teenager
× RELATED ஓடிடியில் வெளியாகிறது ‘லவ்வர்‘!