ஈரான், ஈராக் சென்றுள்ள தங்கள் நாட்டவர்கள் உடனே அங்கிருந்து வெளியேறிவிடுமாறு பஹ்ரைன் எச்சரிக்கை

ஈரான்: ஈரான், ஈராக் சென்றுள்ள தங்கள் நாட்டவர்கள் உடனே அங்கிருந்து வெளியேறிவிடுமாறு பஹ்ரைன் எச்சரித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான், ஈராக் செல்வதைத் தவிர்க்குமாறு தங்கள் நாட்டு குடிமக்களுக்கு பஹ்ரைன் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஈரான், ஈராக் சென்றுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறிவிடுமாறும், அமெரிக்காவின் நட்பு நாடான பஹ்ரைன் எச்சரித்துள்ளது. பதற்றமான சூழ்நிலை, அச்சுறுத்தலுக்கான வாய்ப்புகள், ஆபத்தான போக்குகளை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை வெளியிடப்படுவதாக பஹ்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : Bahrain ,countrymen ,Iran ,Iraq , Bahrain , countrymen,Iran, Iraq ,leave immediately
× RELATED தென்கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளுக்கு...