×

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர்: தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் குவிக்க சீனா திட்டம்

வாஷிங்டன்: அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போரால், சீன நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் குவிக்கும் திட்டத்தில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. சீனாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி  செய்யப்படும் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீது அமெரிக்கா வரியை 25 சதவீதமாக உயர்த்தியது. இதனால் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக சீன பொருட்களை அதிகம் நுகரும் நாடாக இந்தியா உள்ளது. எனவே சீன  நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதைக் குறைத்துவிட்டு, இந்தியாவிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

சீன பொருட்கள் இந்தியாவிற்கு அதிகளவில் வந்தால், உள்நாட்டில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், இரும்பு, ஸ்டீல் போன்ற வணிகங்கள் பாதிப்படையும். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் சீன பொருட்களின் அளவு குறையும்  போது, சீன நாணயமான யுவானின் மதிப்பு சரியும். யுவானின் மதிப்பு குறையும் போது இந்திய ரூபாய் மதிப்பும் குறைய வாய்ப்புள்ளது.

2019-ம் ஆண்டு இதுவரையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 0.3 சதவீதம் சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு அதிகமக இருந்தால் மட்டுமே ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு  ஸ்டீல், கேபிட்டல் கூட்ஸ், ஐ.டி., சேவைகள் உள்ளிட்டவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீனாவிலிருந்து பாலிமர் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கிடையே, கனடா, மெக்சிகோ நாடுகள் உடனான வர்த்தக உறவு  கடுமையாக பாதிக்கப்படுவதால் கவலை அடைந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் மீதான வரி ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.


Tags : China ,US ,war ,India , USA - China, trade war, India, China project
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்