×

உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததால் அலட்சியம்: பாபு திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைர்.

பள்ளிப்பட்டு அடுத்த நொச்சிலி பகுதியில் குடிதண்ணீர் பிரச்னை அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாய நிலங்களில் உள்ள பம்பு செட்டுகளிலிருந்து தலையிலும், சைக்கிள்களிலும் தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை உள்ளது. மேலும் சில விவசாயிகள், தங்கள் பயிர்களுக்கு பாய்ச்ச போதுமான தண்ணீர் இல்லாததால் பொதுமக்களுக்கு கொடுக்க மறுத்து வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததால்தான், தற்போது நிலவிவரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்தவும், குடிநீர் பிரச்னையை தீர்க்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



Tags : administration ,Babu ,district ,Tiruvallur ,farmers union , Local Administration, Disregard, Tiruvallur,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்