மாநில அளவிலான செஸ் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை: மாநில அளவிலான 32வது செஸ் சாம்பியன்ஷிப் போட்டி  சென்னையில் நாளை  தொடங்குகிறது. இது குறித்து சென்னை மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கத்தின் தலைவர் கணசேன், ‘எங்கள் மாவட்ட சங்கம் சார்பில் இந்த போட்டியை நடத்துகிறோம். இந்தப்போட்டி மே 20ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை நடைபெறும். ஒன்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்தப் போட்டியில் பங்கேற்க இதுவரை சுமார் 300 சிறுவர், சிறுமிகள் பதிவு செய்துளளனர். பெயர்களை பதிவு செய்ய ஞாயிறு கடைசிநாள் என்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்றார்.

Tags : State level chess competition ,Chennai , Chess Match, Chennai, Start
× RELATED சென்னையில் குடிநீர் இணைப்பு அனுமதி வழங்க லஞ்சம் பெற்ற இன்ஜினியர் கைது