×

வாடகைதாரர்கள், உடமையாளர்களின் உரிமையை ஒழுங்குபடுத்த 8 பேர் நியமனம்

சென்னை: வாடகைதாரர்கள், நில உடமைதாரரின் உரிமைகள், கடமைகள் ஒழுங்குப்படுத்த கோட்ட அளவில் வாடகை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை கலெக்டர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு ஆணையின்படி வாடகைதாரர்கள், நில உடமைதாரர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் ஒழுங்கு முறைபடுத்துதல் சட்டம் 2017 ஆனது கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டப்பிரிவின் கீழ் கோட்ட அளவில் வாடகை அலுவலர் ஒருவரை நியமித்து ஆணையிட தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடகை அதிகார அலுவலர்களும் அவர்களுக்கு வட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு பெரம்பூர், அயனாவரம் வட்டங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அலுவலகம் 2வது தளம். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. 044 25241002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

வருவாய் கோட்டாட்சியர்,  சார் ஆட்சியர் சென்னை வடக்கு கோட்டம்- புரசைவாக்கம், தண்டையார்பேட்டை வட்டங்களும், மாவட்ட ஆட்சியரின் ேநர்முக உதவியர் (பொது) மயிலாப்பூர், வேளச்சேரி வட்டமும், வருவாய் கோட்டாட்சியர்-சார் ஆட்சியர் சென்னை தெற்கு கோட்டம் -ஆலந்தூர், சோழிங்கநல்லூர் வட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதே போல மாவட்ட ஆய்வுக்குழும அலுவலர்- எழும்பூர், அமைந்தகரை வட்டங்களும், தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்பு திட்டம் சென்னை)- மாம்பலம், கிண்டி வட்டங்களும், வருவாய் கோட்டாட்சியர், சார் ஆட்சியர் சென்னை மத்திய கோட்டம்- அம்பத்தூர், மதுரவாயல் வட்டமும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியர்- மாதவரம், திருவொற்றியூர் வட்டங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலர்களை வாடகை அலுவலர்களாக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு www.tenancv.fir.gov.in என்ற இணைய முகவரியில் மனுக்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : persons ,owners ,tenants , 8 persons , appointed, rights of tenants and owners
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது