×

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் மேலும் இருவர் கைது: கியூ பிரிவு போலீசார் தகவல்

சென்னை: தமிழகத்தில் போலி பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக ஏற்கனவே 13 பேரை கைது செய்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைதான கும்பலிடம் இருந்து 100 போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. போலி பாஸ்போர்ட் மோசடியில் திருச்சியை சேர்ந்த கலைச்செல்வி மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த கிருபராசா, விமலன், உதயா உட்பட 13 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இலங்கையை சேர்ந்தவர்கள் வெளிநாடு தப்பிச் செல்ல போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட இடைத்தரகர் கும்பல் ரூ.5000க்கு போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்து விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை ,திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 13 பேரையும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து குறிப்பிடத்தக்கது. மேலும் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் மேலும் இருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். ஷாகுல் ஹமீத் மற்றும் சின்னையா என்ற அண்ணாச்சி ஆகியோரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இன்னும் 12 பேர் கைது செய்யப்பட உள்ளதாக கியூ பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். போலி பாஸ்போர்ட் வழக்கில் ஏற்கனவே கலையரசி என்பவர் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும்; தலைமறைவாக உள்ள மேலும் 12 பேர் கைது செய்யப்பட உள்ளதாக கியூ பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : KU , Two more,arrested,fake passport case,KU police,detained
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...