×

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான பெண் இடைத்தரகருக்கு மே 31 வரை நீதிமன்றக் காவல்

நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான பெண் இடைத்தரகர் ரேகாவுக்கு மே 31 வரை நீதிமன்றக் காவல் விதித்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தை விற்பனை தொடர்பாக செவிலியர் அமுதவள்ளி உள்பட ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு பெண் இடைத்தரகர் ரேகாவை பெங்களூருவில் போலீஸ் கைது செய்து, நாமக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸ் இன்று ஆஜர்படுத்தினர். இந்நிலையில்  பெண் இடைத்தரகர் ரேகாவிற்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Rasipuram children's sales, female intermediary, court police
× RELATED வடமாநிலங்களுக்கும் திராவிட...