×

பாபர் ஆஸம் அபார சதம் இங்கிலாந்து அணிக்கு 341 ரன் இலக்கு

நாட்டிங்காம் : பாகிஸ்தான் அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 341 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. இமாம் உல் ஹக், பகார் ஸமான் இருவரும் பாகிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். இமாம் உல் ஹக் 3 ரன் எடுத்த நிலையில், மார்க் வுட் வீசிய பந்து முழங்கையில் பலமாகத் தாக்கியதால் காயம் அடைந்த இமாம் பெவிலியன் திரும்பினார் (ரிடயர்டு ஹர்ட்). அடுத்து வந்த பகார் ஸமானுடன் பாபர் ஆஸம் இணைந்தார். பகார் 57 ரன் (50 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய பாபர் - ஹபீஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்தது.

ஹபீஸ் 59 ரன் (55 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), பாபர் ஆஸம் 115 ரன் (112 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஆசிப் அலி 17, இமத் வாசிம் 12 ரன்னில் வெளியேற, சோயிப் மாலிக் 41 ரன் (26 பந்து, 4 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார். ஹசன் அலி 1 ரன் எடுத்து டாம் கரன் பந்துவீச்சில் டென்லி வசம் பிடிபட்டார். இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 340 ரன் குவித்தது. கேப்டன் சர்பராஸ் அகமது 21 ரன், இமாம் உல் ஹக் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் டாம் கரன் 4, மார்க் வுட் 2, ஜோப்ரா ஆர்ச்சர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 341 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.


Tags : Babur Azam ,England , Babur Azam, scored a century,score 341 runs ,England
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்