×

கமல் மீது செருப்பு, முட்டை வீசிய பாஜக நிர்வாகி கைது

கரூர்: பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் மீது செருப்பு வீசிய பா.ஜ.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த 12ம் தேதி பள்ளபட்டியில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் அரவக்குறிச்சி தொகுதி வேலாயுதம்பாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் பேசிவிட்டு மேடையைவிட்டு கீழே இறங்கினார். அப்போது ஒருவர் மேடையை நோக்கி செருப்பையும், முட்டையையும் வீசினார். அதற்குள் கமல் வேனில் ஏறி சென்று விட்டார். செருப்பு வீசியவரை மநீம தொண்டர்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அவர்களிடம் இருந்து அவரை போலீசார் மீட்டு விசாரித்தனர்.

இதில், மரவாபாளையத்தை சேர்ந்த கரூர் ஒன்றிய பா.ஜ.க. இளைஞர் அணி தலைவர் ராமச்சந்திரன் (25) என்பது தெரியவந்தது. மநீமவினர் தாக்கியதில் காயமடைந்த ராமச்சந்திரனை, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முன்னதாக, கமல்ஹாசன் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேடை அருகே மறியல் செய்ய இந்து முன்னணியினர் முயன்றனர். இதற்காக வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் திரண்டு வந்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த 50 பேரை போலீசார் கைது செய்து ஒரு மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதனிடையே, சிகிச்சை பெற்று வந்த  ராமச்சந்திரன் மீது 5  பிரிவுகளில் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.



Tags : Kamal ,sandalwood lady ,BJP , Kamal, sandalwood, egg, BJP executive, arrested
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...