×

ஐசிசி உலக கோப்பை வர்ணனையாளர் குழுவில் கங்குலி

துபாய்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான வர்ணனையாளர் குழுவில் இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இடம் பெற்றுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், போட்டிகளின் நேரடி ஒளிபரப்பின்போது வர்ணனையாளர்களாக செயல்பட உள்ள குழுவினரின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் பல்வேறு அணிகளை சேர்ந்த முன்னாள் நட்சத்திரங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 46 நாளில் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளுக்கான நேரடி ஒளிபரப்பில் ஐசிசி அதிக கவனம் செலுத்தி வருகிறது. இவற்றுடன் 10 பயிற்சி ஆட்டங்களும் முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு போட்டிக்கும் 8 ‘ஹாவ்க் ஐ’ கேமரா உட்பட குறைந்தபட்சம் 32 கேமராக்கள் பயன்படுத்தப்படும்.

மேலும், உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக 360 டிகிரி ரீப்ளே வசதியும் அளிக்கப்பட உள்ளது. வர்ணனையாளர் குழு: சவுரவ் கங்குலி, சஞ்சய் மஞ்ரேக்கர், நாசர் உசேன், இயான் பிஷப், மெலனி ஜோன்ஸ், குமார் சங்கக்கரா, மைக்கேல் ஆத்தர்டன், அலிசான் மிட்செல், பிரெண்டன் மெக்கல்லம், கிரீம் ஸ்மித், வாசிம் அக்ரம், ஷான் போலக், மைக்கேல் ஸ்லேட்டர், மார்க் நிகோலஸ், மைக்கேல் ஹோல்டிங், இசா குஹா, போமி எம்பாங்வா, ஹர்ஷா போக்லே, சைமன் டூல், இயான் ஸ்மித், ரமீஸ் ராஜா, அதர் அலி கான், இயான் வார்டு.

Tags : Ganguly ,commentator ,ICC World Cup , Ganguly , ICC World Cup commentator's board
× RELATED சில்லி பாயின்ட்…