×

346 பேரை பலி கொண்ட விபத்துகள் எதிரொலி 737 மேக்ஸ் விமான மென்பொருள் புதுப்பிப்பு: போயிங் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: 346 பேரை பலி கொண்ட விமான விபத்துகள் நிகழ்வதற்கு காரணமாக இருந்த சாப்ட்வேரை புதுப்பித்து விட்டதாகவும், இதை 207 விமானங்களில் சோதனை செய்து பார்த்து விட்டதாகவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. எத்தியோபிய தலைநகர் அட்டிஸ் அபாபாவில் இருந்து எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 மேக்ஸ் ரக விமானம், கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளானதில் 4 இந்தியர் உட்பட 157 பேர் இறந்தனர். இதுபோல் இதே ரக இந்தோனேஷிய விமானம் கடந்த அக்டோபரில் விபத்துக்கு உள்ளானதில் 189 பேர் இறந்தனர். இந்த இரண்டு விபத்துக்கும் சாப்ட்வேர் பிரச்னைதான் காரணம் என்று கண்டறியப்பட்டது.  தவறான சென்சார் தகவல்கள் காரணமாக விபத்து நிகழ்ந்துள்ளது.  சென்சார் தேவையில்லாத நேரத்தில் எம்சிஏஎஸ் ஐ ஆன் செய்துள்ளது. விமானத்தை விமானி மேலே ஏற்ற முயற்சித்தபோது, இந்த தானியங்கி சென்சார் விமானத்தை கீழிறக்க முயன்றுள்ளது. இருப்பினும் பைலட்கள் போயிங் தரப்பில்  கொடுக்கப்பட்ட அவசர கால நடைமுறைகளை பின்பற்றியும் விபத்தை தடுக்க முடியவில்லை.

இதை தொடர்ந்து இந்த ரக விமானங்களை இயக்க விமான போக்குவரத்து இயக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தடை செய்தது. இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு ஏஜென்சி உட்பட பல நாடுகளிலும் இந்த விமானம் தடை செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கான மென்பொருளை புதுப்பித்து விட்டதாக (சாப்ட்வேர் அப்டேட்) போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து போயிங் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான டென்னிஸ் முய்லென்பெர்க் விடுத்துள்ள அறிக்கையில், ‘பாதுகாப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியம். எனவே, 737 மேக்ஸ் ரக விமானத்தை கட்டுப்படுத்தும் மென்பொருளை தற்போது புதுப்பித்து விட்டோம். ஏற்கெனவே நிகழ்ந்தது போல தவறு எதுவும் இனி நடைபெற வாய்ப்பு இல்லை. இதை 207 விமானங்களில் 360 மணி நேரங்களுக்கு மேல் பயன்படுத்தி சோதனையை வெற்றி கரமாக முடித்து விட்டோம். அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் கேட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்படும். புதிய சாப்ட்வேர் அப்டேட் மூலம், மிக பாதுகாப்பான விமானமாக 737 மேக்ஸ் இனி திகழும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.

Tags : Accidents ,victims ,announcement ,Boeing , Accident, airline software, renewal, Boeing company
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...