பீர்க்கன்காரணை காட்டில் தீ விபத்து

தாம்பரம்: தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் பல ஏக்கர் பரப்பில் காடு உள்ளது. இதில், தைல மரங்கள், வேப்ப மரங்கள், மூலிகை செடிகள் உள்ளன. நேற்று மதியம் இந்த காட்டின் ஒரு பகுதியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 வண்டிகளில் 20 வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க போராடினர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் மற்றும் செடிகள் எரிந்து நாசமானது.

Tags : Fire accident , Fire accident, forest
× RELATED கெத்தை வனப்பகுதியில் காட்டுத் தீ 30 ஏக்கர் மரங்கள், செடிகள் நாசம்