×

அடகு கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்றியவர் சிக்கினார்

ஆலந்தூர்: நங்கநல்லூர் எம்.ஜி.ஆர் ரோட்டில் அடகு கடை நடத்தி வருபவர் ஹரியந்த் ஜெயின் (54). நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த நபர், 4 கிராம் தங்க நகையை அடகு வைத்து ₹8ஆயிரத்து 500 பெற்று சென்றார். பின்னர், மீண்டும்  வந்து 20 கிராம் தங்க நகையை அடகு வைத்து ₹55 ஆயிரத்தை  பெற்று சென்றுள்ளார். இது ஹரியந்த்துக்கு சந்தேகத்தை  ஏற்படுத்தியது. உடனே, அவர் கொடுத்த  நகையை உரசி பார்த்தபோது  அது போலியானது என தெரிய வந்ததது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை பிடித்து பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில், அந்த நபர் சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியை சேர்ந்த சின்னசாமி (60) என தெரியவந்தது. இதனையடுத்து, சின்னசாமி மீது வழக்கு பதிவு செய்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : mortgage store , deceiver is trapped ,fake jewel,mortgage store
× RELATED அரசு உத்தரவை மீறிய அடகு கடைக்கு சீல்