×

வங்கி அதிகாரி வீட்டில் 25 சவரன் திருட்டு ஒரு வருடத்திற்குப்பின் கொள்ளையன் கைது

அண்ணாநகர்: அரும்பாக்கம் கீரின்வேலி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் இருதயராஜ் (60). ஒய்வுபெற்ற வங்கி அதிகாரி. இவர், கடந்த ஆண்டு மே மாதம் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இருதயராஜ், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை தேடினர். ஆனால், கிடைக்கவில்லை. இதனால், வழக்கை கிடப்பில் போட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அமைந்தகரை மேத்தா நகரில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை மடக்கி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை அமைந்தகரை காவல் நிலையம் கொண்டு வந்து, விசாரித்தனர்.

அதில், டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்த ரகு (எ) ரகுவரன் (21) இவரது கூட்டாளி ராஜேஷ் (22) என்பதும், இவர்களில் ரகு என்பவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன், இருதயராஜ் வீட்டில் 25 சவரன் நகையை திருடிச்சென்றதும் தெரியவந்தது. உடனே, அரும்பாக்கம் போலீசாரிடம் இருவரையும் ஒப்படைத்தனர். பின்னர், ரகு என்பவரிடம் இருந்து 10 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணைக்குப் பின் போலீசார் ராஜேஷை விடுவித்தனர். ரகு மீது ஏற்கனவே அமைந்தகரை காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுபாட்டில் விற்றவர் கைது


செம்மஞ்சேரியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் பாரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பாரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை சேர்ந்த அழகு (26) என்ற பார் ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்கள், 1000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : bank officer ,robbery ,home , Bank officer arrested,robbery ,25 years , robbery at home
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு