×

மயிலாடுதுறை அருகே தொடர்ந்து பதற்றம் போலீஸ் பாதுகாப்புடன் வயலில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி தீவிரம்

மயிலாடுதுறை :  நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா மாதானம் முதல் மேமாத்தூரை வரை 29 கிமீ தூரத்துக்கு கெயில் நிறுவனம் எண்ணை எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு பல்வேறு இடங்களில் விவசாயிகளும் நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் விதை விட்டுள்ள நாற்றங்கால் பகுதியில் எல்லாம் பொக்லைன் மூலம் குழி பறித்த பயிர்களை நாசம் செய்துள்ளனர். இதையடுத்து உடனடியாக செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.  இந்நிலையில் முடிகண்டநல்லூர் கிராமத்தில் விவசாயிகள் பாலு, மோகன்தாஸ், சிவானந்தம் ஆகியோர் தங்கள் வயல்களில் குறுவை நடவு பணிகளை பொக்லைன் இயந்திரங்களை கொண்டு பள்ளம் தோண்டியபோது விவசாயிகள் தங்களது வயலில் இறங்கி உடலில் சேற்றினை பூசி போராட்டம் நடத்தியதால் தற்காலிகமாக பைப் போடும் பணி நிறுத்தப்பட்டது.

‘முடிகண்டநல்லூர் பகுதியில் கெயில் நிறுவனத்தினர் கிடங்கு ஒன்றை அமைத்து  நூற்றுக்கணக்கான எரிவாயு குழாய்களை அதில் அடுக்கி வைத்துள்ளனர். 5க்கும்மேற்பட்ட நவீன பொக்லைன் எந்திரங்கள் தேவையான பணியாளர்களுடன் வேலை நடைபெற்று வருகிறது. விவசாயம் செய்யாத வயலில் வேலைகள் நடைபெற்று வருகிறது.  நேற்றுமுன்தினம் விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட பகுதியையொட்டி குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதைக்கண்ட உமையாள்புரம் பகுதி கிராம விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று திரண்டு வயலில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் 100க்கும்மேற்பட்ட விவசாய தொழிலாளர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அங்கிருந்து வெளியேறிய தொழிலாளர்கள்  எரிவாயு பைப்லைன் போட உள்ள வயலுக்கு முன்பாக நின்று கெயில் நிறுவனம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags : Mayiladuthurai ,field , Police intensify ,gas pipeline,f police protection
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...