×

வீட்டு குறிப்புகள்

*கோடை காலத்தில் தினமும் 2 துண்டு அன்னாசிப்பழம் சாப்பிட்டால் உடல் சூடு சீராகும். இந்த பழத்தை சாறு பிழிந்து தேன் கலந்து 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் இளைத்தவர்கள் உடல் வலிமை பெறுவர்.

*  ஆரஞ்சுப்பழத்தை சாறாக்கி 3 நாட்களுக்கு காலையில் குடித்தால் அஜீரண குறைபாடு, வயிற்றுப்போக்கு நீங்கும். இரவில் படுப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக இப்பழத்தை சாறு எடுத்து தேன் கலந்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும். ஆரஞ்சுப்பழத்தின் தோலை காயவைத்து அத்துடன் ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து பொடியாக்கி பற்பொடியாக பயன்படுத்தினால் பற்கள் ெவண்மை பெறும், ஈறுகள் உறுதியாகும், பல் நோய் வராது.

* அத்திப்பழம் தினமும் சாப்பிட்டால் வளரும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு ஏற்படும். பித்தத்தை தணித்து சமநிலைப்படுத்தும், அத்திப்பழ விதைகளை காயவைத்து பொடி செய்து தினமும் இருவேளை தேனில் கலந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

*  வாழைத்தண்டில் வைட்டமின் ஏ, பி1, பி2, சி ஆகிய சத்துக்கள் உள்ளன. இதில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, புரதசத்தும் உள்ளது. இதை அடிக்கடி உட்கொண்டால் வயிற்றிலுள்ள கல் மற்றும் சிறுநீர்பை கல் கரையும். கோடை நேரத்திற்கு ஏற்ற உணவு வாழைத்தண்டு ஆகும். இதனை வாரத்திற்கு ஓரிரு முறை சூப்பாகவும் அருந்தலாம்.

*  சிகப்பு முள்ளங்கி அதிக மருத்துவ சக்தி உடையது. சிறுநீரை பிரித்து சுலபமாக வெளியேற்றும். மூலரோகத்தில் ஏற்படும் வலியை போக்கும். கண்பார்வையை தெளிவடையச் செய்யும். உடல்  வெப்பத்தை சீர்படுத்தும். சிவப்பு முள்ளங்கியில் ஏ, பி1, பி2, சி ஆகிய சத்துக்கள் உள்ளன. குடல் தொடர்பான அனைத்து கோளாறுகளையும் நீக்கும்.

Tags : House Tips,summer
× RELATED வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பாஜ...