அமெரிக்கா, கிரீஸ் நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் 61 பேர் நாடு கடத்தல்

அமெரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் 61 பேர் நாடு கடத்தப்
பட்டிருக்கின்றனர். இதனை பாகிஸ்தான் செய்தி நிறுவனமான டான் உறுதிப் படுத்திருக்கிறது. அமெரிக்காவில் விசா காலம் முடிந்த பிறகும் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் பிற நாடுகளை சேர்ந்தவர்களை கைது செய்து நாடு கடத்த டிராப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது போன்று விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருந்தவர்கள் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் என பல்வேறு காரணிகளால் சட்ட விரோதமாக தங்கியிருந்த பாக்கிஸ்தான் நாட்டை சேர்த்த 52 பேரை அமெரிக்க குடியுரிமை துறை பலத்த பாதுகாப்புடன் தனி விமானத்தில் நாடு கடத்தியது. இதேபோல் கிரீஸ் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் 9 பேர் நாடு கடத்தப் பட்டுள்ளனர். 


× RELATED பாகிஸ்தான் செல்லும் 463 இந்திய சீக்கிய...