×

முதல்வர் பதவிக்கு மல்லிகார்ஜூனகார்கே சிறந்தவர் சித்தராமையாவை வெறுப்பேற்றிய குமாரசாமி

முதல்வர் பதவிக்கு மல்லிகார்ஜூன கார்கே சிறந்தவர் என்று  சித்தராமையாவை வெறுப்பேற்றும் வகையில் முதல்வர் குமாரசாமி டிவீட்  செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்தராமையாவின் ஆதரவாளர்களான  எம்எல்ஏக்கள் டாக்டர் சுதாகர், எஸ்டி சோமசேகர் உள்ளிட்டோர் சித்தராமையாவே  எங்களின் முதல்வர் எனக் கூறினர். காங்கிரஸ் எம்எல்ஏக்களின்  முதல்வர் கோஷம்,  குமாரசாமிக்கு எரிச்சலை அளித்தது. அதை வெளியில் காண்பித்துக்கொள்ளாத  முதல்வர் குமாரசாமி மஜத தலைவர் விஸ்வநாத் வாயிலாக முன்னாள் முதல்வர்  சித்தராமையாவுக்கு பதில் கொடுத்தார்.


இந்நிலையில் டிவிட்டர் பதிவில்  முதல்வர் குமாரசாமி மறுபடியும் வார்த்தை போரை தொடங்கினார். மல்லிகார்ஜூன  கார்கே முதல்வராவார் என குமாரசாமி கூறியதற்கு சித்தராமையாவும் டிவிட்டர்  மூலமாக பதிலடி அளித்துள்ளார். கூட்டணி ஆட்சி முதல்வராகும் தகுதி  மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இருக்கிறது. மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முதல்வர்  பதவி மட்டும் இன்றி அதை விட பெரிய பதவிகளும் கிடைக்கும். அதற்கான  திறமையும் அவருக்கு இருக்கிறது. இதே போல் மஜதவின் ரேவண்ணா உள்ளிட்ட வேறு  சிலரும் உள்ளனர் என சித்தராமையா டிவீட் செய்தார். இந்த டிவிட்டர் போரால் மே 23க்கு பிறகு மாநில அரசியலில் மாற்றம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.


Tags : Maha Karijunakarkar ,Chief Minister ,Sitharamayya ,Kavarasamy , Chief Minister, Mallikarjunakare, Coomaraswamy
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...