×

திமுக பிரமுகர் தற்கொலை விவகாரம் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் ஊட்டிக்கு அதிரடி மாற்றம்

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம்  நேதாஜி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (50). திமுக பிரமுகரான இவர், அந்த பகுதியில் தனியார் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 15ம்தேதி இவர் போலீசார் போலியாக ஜாதி வன்கொடுமை வழக்கு பதிவு செய்ததாக வீடியோவில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர், தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாகவும், அவர்களுக்கு போலீசார் உடந்தையாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. தீபா கனிகர் நேரில் விசாரணை நடத்தினார். இதில் பிரேம்குமார் குடும்பத்தினரிடமும் விசாரணை நடந்தது. அப்போது டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் கொடுத்த மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். முதற்கட்டமாக, பிரேம்குமார் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை, உயரதிகாரிகளுக்கு தெரிவிக்காத எஸ்பி ஏட்டு பழனிவேல், இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதே போல், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் கேசவன் அதிரடியாக ஊட்டிக்கு மாற்றுப்பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார். அதே நேரத்தில் டிஎஸ்பி ராஜூ பெயரில், உறவினர்கள் கொடுத்த புகாரை ஏற்க போலீசார் மறுத்துள்ளனர். இது குறித்து பிரேம்குமார் உறவினர்கள் கூறுகையில், ‘‘ சம்மந்தப்பட்ட டிஎஸ்பி மீது புகார் தெரிவிக்க கூடாது என்று அதிகாரிகள் சிலரே கூறுகின்றனர். இதற்காக எங்களிடம் பேரமும் பேசுகின்றனர். ஆனால், இதற்கெல்லாம் பணிய மாட்டோம்’’ என்றனர்.


Tags : Attur Inspector ,DMK , DMK, suicide, affair, attar inspector, fed, transition
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...