×

தேனியில் ஓபிஎஸ் மகனை வெற்றிபெற வைக்க மீண்டும் 20 வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வந்ததற்கு கடும் எதிர்ப்பு: காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியை தட்டிப்பறிக்கும் செயல் என குற்றச்சாட்டு

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் போட்டியிடும் தேனி தொகுதிக்கு மீண்டும் திருவள்ளூரில் இருந்து 20 வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வந்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, வாக்கு இயந்திரங்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியை தட்டிப்பறிக்கும் செயல் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது: தேனி நாடாளுமன்ற தொகுதியில் வருகிற 19ம் தேதி நடைபெற இருக்கும் மறுவாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக திருத்தப்பட்டிருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அதனால், இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகியிருக்கும் அத்தனை துண்டு சீட்டுகளை எண்ண வேண்டும். அப்படி செய்தால்தான், தேனி நாடாளுமன்றத்தில் நடைபெறும் மறுவாக்குப்பதிவின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

அதிமுகவின் தேனி வேட்பாளர், ஒரு சில தேர்தல் ஆணைய பணியாளர்களோடு இணைந்துகொண்டு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ், திமுக மற்றும்  எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன. ஆனாலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய அதிகார பலம், பணபலம், ஆள்பலம் ஆகியவற்றை கொண்டு, தற்போது பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் திருத்தங்கள் செய்தேனும் தன்னுடைய மகனை இந்த தேர்தலில் வெற்றிபெற வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.

தற்போது தேனி தொகுதிக்கு நேற்று முன்தினம் மீண்டும் 20 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திருவள்ளூரில் இருந்து தேர்தல் அலுவலர்கள் எடுத்து வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்துள்ளோம். இது தமிழகத்தின் துணை முதல்வரின் மகனான அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டவிரோத உள்நோக்கத்துடனேயே செய்யப்பட்டுள்ளது. இது தேனியில் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியை தட்டிப்பறிக்கும் செயல் ஆகும்.

அதனால், கோவையில் இருந்தும், திருவள்ளூரில் இருந்தும் தேனிக்கு புதிதாக கொண்டு வரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனடியாக திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும். மக்களுடைய வாக்குகளை திருத்த நினைக்கும் அதிமுக வேட்பாளரின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, நியாயமான தேர்தலை தேனியில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டவிரோத உள்நோக்கத்துடனேயே செய்யப்பட்டுள்ளது.

Tags : candidate ,OBC ,Theni ,Congress , In Teen, OBS's son, to win, 20 ballot machine, strong opposition, Congress, tapping, accusation
× RELATED மதுரையில் மாஜி அமைச்சர் ஆர்.பி....