×

நாளை மறுநாள் 7ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: இன்று மாலையுடன் பிரசாரம் முடிவு

புதுடெல்லி: மக்களவைக்கு நாளை மறுநாள் 7ம் கட்ட வாக்குபதிவு நடைபெற உள்ள நிலையில், 50 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. வன்முறை நடந்த மேற்குவங்கத்தில் மட்டும் நேற்று இரவு 10 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கிய இந்த தேர்தல் வரும் 19ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் முதல்கட்டமாக ஏப்ரல் 11ல் தேர்தல் நடைபெற்றது. 2ம் கட்டமாக தமிழகத்தில் வேலூர் தவிர 38 தொகுதிகளில் கடந்த மாதம் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று புதுச்சேரி உள்பட 97 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை 7ம் கட்டம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

அன்று மேற்கு வங்கத்தின் 9 தொகுதிகள், பீகாரில் 8, இமாச்சலில் 4, ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாப்பில் 13, உத்தரப் பிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒரு தொகுதி  உள்பட மொத்தம் 59 தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, பாஜ தலைவர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் இந்த மாநிலங்களில் தீவிர பிரசாரம் செய்துவந்தனர். இந்த நிலையில் மேற்கு வங்கத்தில்  அமித்ஷா பேரணியில் நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து இன்று நிறைவடைய வேண்டிய தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்னதாக நேற்று இரவு 10 மணியுடன் முடித்துகொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.  இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்தார். இதையடுத்து மற்ற 7 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. இதையடுத்து நாளை மறுநாள் 7ம் கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இதையொட்டி போலீசார் மற்றும் துணை ராணுவப்படையும் இந்த மாநிலங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.  7 கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியிடப்படும்.

Tags : phase ,campaign , Election, voting, and campaign
× RELATED நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88...