×

வீடு கட்டித்தருவதற்கு ஓர் ஆண்டுக்கும் மேல் காலதாமதமானால் பணம் திரும்ப பெற வாடிக்கையாளருக்கு உரிமை உள்ளது

புதுடெல்லி: பணம் செலுத்திய பின்னரும் உரிய காலத்திற்குள் வீடு கட்டித்தராமல், ஓர் ஆண்டிற்கு மேல் காலதாமதம் ஆனால், பில்டரிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற, வாடிக்கையாளருக்கு உரிமை உள்ளது என்று தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு மையம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், பில்டர்களிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டை பெற முடியாமல் ஆண்டு கணக்கில் தவிக்கும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.
“வீடு ஒப்படைப்பு என்பது நீண்ட காலம் தாமதமானால், வீடு கட்ட பணம் கொடுத்தவர், தான் கட்டிய பணத்தை திரும்பப் பெற உரிமை உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஓர் ஆண்டுக்கு மேல் காலதாமதம் ஆனால் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று குறை தீர்ப்பு மையத்தின் நீதிபதி பிரேம் நாராயண் தெரிவித்தார்.


டெல்லியைச் சேர்ந்த ஷாலாப் நிகாம் என்பவர் கடந்த 2012ல் குர்காமில் நவீன அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு ஒன்றை ௳ாங்க பணம் கட்டினார். இந்த குடியிருப்பு திட்டத்தை ‘ஓரிஸ் இன்பிரஸ்டிரக்சர்ஸ் அன்டு 3சி கம்பெனி’ என்ற நிறுவனம் மேற்கொண்டது. மொத்த தொகையான ரூ.1 கோடியில் இவர் ரூ.90 லட்சத்தை கட்டினார். ஒப்பந்தப்படி, பில்டர், வீடு ஒதுக்கீடு தாரருக்கு 6 மாதம் கூடுதல் கால அவகாசத்துடன் 36 மாதங்களில் வீடு கட்டி ஒப்படைக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் வீடு கட்டி ஒப்படைக்கவில்லை. காலதாமதம் ஆனதால், ஒதுக்கீடுதாரர் நுகர்வோர் குறை தீர்ப்பு மையத்தை நாடினார். குறிப்பிட்ட காலத்திற்கு தனக்கு வீடு கட்டிதர வேண்டும் இல்லை என்றால் கட்டி பணத்தை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்று  கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கில்தான் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.

Tags : Customer ,house , House, money, right
× RELATED கொழுப்பு சத்து குறைக்க மருந்து சாப்பிட்ட 5 பேர் பலி