×

பிரதமர் பதவியில் இருந்து மோடி தூக்கி எறியப்படுவார்: புதுவை முதல்வர் நாராயணசாமி பரபரப்பு பேட்டி

சென்னை: பிரதமர் பதவியில் இருந்து மோடியை தூக்கி எறிய வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எண்ணமாக உள்ளது என புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று காலை 9.30 மணி விமானத்தில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

நடிகர் ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பர், நல்லவர். அவர் அரசியலுக்கு வருவதும், வராததும் அவருடைய சொந்த விருப்பம். அவர் விருப்பப்பட்டால் அரசியலுக்கு வர அவருக்கு உரிமை உண்டு. பொதுவாக அரசு வேலைக்கு சேர விரும்புபவர்களுக்கு அதற்கென ஒரு சில தகுதிகள் இருக்க வேண்டும். ஆனால் அரசியலுக்கு வருபவர்களுக்கு அதேபோல் எந்த தகுதியும் இல்லை. யார் வேண்டுமானாலும் விருப்பப்பட்டால் அரசியலுக்கு வரலாம்.

முதலில் அவர் அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கட்டும். அதன் பின்னர் அவர் யாரோடு கூட்டணி வைக்கிறார் என்று பார்க்கலாம்.
கமல் பிரச்னையில் முதலில் சகிப்புத்தன்மை வேண்டும். தீவிரவாதம் ஒரு மதத்தில் தான் உள்ளது என்றில்லை.  இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர் என அனைத்து மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கின்றனர்.

எந்த மதத்தில் தீவிரவாதம் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். காந்தியை சுட்டுக் கொன்ற  கோட்சேவுக்கு சிலை வைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அவரை வணங்குகின்றனர். அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுவதுதான் பாஜக. எனவே பாஜகவை  பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓட்டு வங்கிக்காக இந்துத்துவம் பற்றி பேசி மக்களை ஏமாற்றி வருவது பித்தலாட்டத்தனம்.
 
மோடியை பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்பதே நாட்டு மக்களின் மனநிலை. காங்கிஸ் கட்சியை பொறுத்தமட்டில் மாநில கட்சிகள் ஆதரவுடன் பிரதமரை தேர்வு செய்யும். பாஜ இந்த தேர்தலில் 120 இடங்களுக்கும் குறைவாகத்தான் வெற்றி பெறும். பாஜ கூட்டணி கட்சிகளை சேர்த்தாலும், அவர்கள் ஆட்சிக்கு வரமுடியாது. அதேபோல் தமிழகத்திலும், ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Modi ,Narayanasamy , Prime Minister, Modi, will be thrown out, Chief Minister Narayanasamy, interviewed
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...