3 நாடுகள் கிரிக்கெட் பைனலில் வ.தேசம்-மே.இந்தியத்தீவு

டப்ளின்: அயர்லாந்தில்  நடைப்பெற்று வரும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் இன்று வங்கதேசம்- மேற்கு இந்தியத்தீவு அணிகள்  மோத உள்ளன. உலக  கோப்பைக்கு முன்னோட்டமாக அயர்லாந்து, வங்கதேசம், மேற்கு இந்தியத்தீவு என 3  நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. அயர்லாந்து  நாட்டில் நடைபெறும் இந்த தொடரின் லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற  அணியுடன் தலா 2 முறை மோதின. அனைத்து போட்டிகளிலும் வென்ற வங்கதேசம்  புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திலும், 2 போட்டிகளில்  வென்ற மேற்கு  இந்தியத்தீவு 2வது இடத்திலும் உள்ளன. அயர்லாந்து ஒருபோட்டியில் கூட  வெற்றிப் பெறவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைப்பெற்ற கடைசி  லீக் போட்டியில் அயர்லாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய  அயர்லாந்து அணி அபாராமாக விளையாடி 8 விக்கெட்கள் இழப்புக்கு 292 ரன்கள்  குவித்தது.

அடுத்து களமிறங்கிய வங்கதேசம் அதிரடியாக விளையாடி 43 ஓவர்களில் 4  விக்ெகட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றிப் பெற்றது. இந்நிலையில்  இன்று நடைபெற உள்ள இறுதிப் ேபாட்டியில்  வங்கதேசம்-மேற்கு இந்தியத்தீவு அணிகள்  மோத உள்ளன. உலக கோப்பையில் விளையாட  உள்ள இந்த 2 அணிகளும் மோத உள்ள இந்தப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்றில் இந்த அணிகள் மோதிய 2  போட்டிகளிலும் வங்கதேசம்தான் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் ரன் ரேட்  அடிப்படையில் மேற்கு இந்தியத்தீவு அணிதான் முன்னிலையில் உள்ளது. வங்கதேசம்  இந்த தொடரில் வென்ற எல்லா லீக்  போட்டிகளிலும் 247 முதல் 294 ரன்களை 3, 4  ஓவர்கள் மிச்சமிருக்கும் போதே வென்று அசத்தி வருகிறது. இதுவரை இந்த அணிகள்  36 முறை மோதியுளளன. அதில் மேற்கு இந்தியத்தீவு 21 முறையும், வங்கதேசம் 13  முறையும் வெற்றி கண்டுள்ளன. இரண்டு ேபாட்டிகளில் முடிவு இல்லை.

அதே நேரத்தில் இந்த அணிகள் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் வங்கதேசம் 4 வெற்றிகளை பதிவு செய்து வலுவான நிலையில் உள்ளது. ஐபிஎல்  தொடரில் விளையாடிய கிறிஸ் கெயில் போன்றோர் இன்னும் மேற்கு இந்தியத்தீவு  அணிக்கு திரும்பவில்லை.  ஒருவேளை அவர்கள் நாளைய போட்டியில் தங்கள் அணிக்காக  விளையாடினால் வெற்றி திசைமாறலாம். உலக கோப்பையில்  விளையாட உள்ள மேற்கு இந்தியத்தீவுகள் அணியில் இடம் பெற்றுள்ள ஆண்ரே ரஸல்,  சிம்ரோன் ஹெட்மையர், எவின் லீவிஸ், கார்லோஸ் பிரத்வைட், நிகோலஸ் பூரன் இந்த  தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. ஐபிஎல் தொடரில் பங்கேற்றதால் அணிக்கு  திரும்ப தாமதம் ஏற்பட்டுள்ளது.

Tags : nations ,cricket bin , 3 countries cricket, vedham-ma, india
× RELATED உலக நாடுகள் இடையேயான நீர் தரவரிசை...