×

இத்தாலி கோப்பை கால்பந்து ரசிகர்கள் வன்முறை போலீஸ் காருக்கு தீ

ரோம்: இத்தாலியின்  புகழ் பெற்ற கால்பந்து போட்டியான ‘இத்தாலி கோப்பை’ 1922ம் ஆண்டு முதல் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று  முன்தினம் ரோமில் நடைப்பெற்ற இந்த சீசனின் இறுதிப் ேபாட்டியில்  லட்ஸ்ஜோ - அட்லாண்டா அணிகள் மோதின.  அதில் 2-0 என்ற  கோல்கணக்கில் வென்ற லட்ஸ்ஜோ அணி 7வது முறையாக கோபை்பையை வென்றது. இதற்கிடையில்  போட்டி தொடங்குவதற்கு முன்பு தங்கள் காரில் கத்தி, பட்டாசு என ஆபத்து  விளைவிக்கும் பொருட்களை வைத்திருந்ததாக லட்ஸ்ஜோ அணி ரசிகர்கள்  2 பேர் கைது  செய்யப்பட்டனர். அது தொடர்பாக  லட்ஸ்ஜோ ரசிகர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் விவாத்ததில் ஈடுபட்டனர்.  ஒருகட்டத்தில் அது ரசிகர்கள்-  போலீஸ் மோதலாக மாறியது. ரசிகர்கள்  கற்கள், பாட்டில்கள் என கையில் கிடைத்த  பொருட்களை எல்லம் போலீசார் மீது வீசினர். பதிலுக்கு போலீசார் தடியடி  நடத்தினர்.

அதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் போலீஸ் கார் ஒன்றுக்கு தீ  வைத்தனர். விரைந்து வந்த மற்ற போலீஸ்காரர்கள் புகையால் காருக்குள் மயங்கி  கிடந்த 2 போலீஸ்காரர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரசிகர்கள்  மேலும் 2 போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கினர்.  வன்முறையை  கட்டுப்படுத்த   போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர்  பீய்ச்சியடித்தும் ரசிகர்களை விரட்டியடித்தனர்.  மேலும் இச்சம்பவம்  தொடர்பாக 5 ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர்.

Tags : Italy Cup ,football fans , Italy Cup, football fan, violence, police car fire
× RELATED நைஜீரியாவில் கால்பந்து ரசிகர்கள்...