×

இத்தாலி ஓபன் டென்னிஸ் ஒசாகா, முகுருசா, பெடரர், நடால்: 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில்  ஒற்றையர் பெண்கள் பிரிவில் நவோமி ஒசாகா, கெர்பினி முருகுசா ஆகியோரும், ஆண்கள் பிரிவில் பெடரர், நடால் ஆகியோரும்  காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்கு முன்னேறினார். இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ரோம் நகரில் நடைபெறுகிறது.  பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று ஒன்றில்  உலகின் முதல் நிலை வீராங்கனை நவோமி ஒசாகா(ஜப்பான்) - 33வது இடத்தில் இருக்கும் டொமினிகா சிபுல்கோவா(ஸ்லோவாக்கியா) ஆகியோர் விளையாடினர். அதில் ஒசாகா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் டொமினிகாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார். இந்தப் போட்டி ஒரு மணி  43 நிமிடங்கள் நடந்தது. இன்னொருப் போட்டியில் தரவரிசையில்  19வது இடத்தில் இருக்கும் கெர்பினி முருகுசா(ஸ்பெயின்) - 30வது வரிசையில் இருக்கும் டேனியாலி ெகாலின்ஸ்(அமெரிக்கா) ஆகியோர் மோதினர்.

சுமார் 2 மணி 9 நிமிடங்கள் நடந்த இந்தப ்போட்டியில் 6-4, 4-6, 6-2 என் செட்கணக்கில்  வென்ற முருகுசா  காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னதாக நேற்று நடைப்பெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஒன்றில் உலகின் 3ம் நிலை வீரர் ரோஜர் பெடரர்(சுவிட்சர்லாந்து) 6-4, 6-3 என்ற நேர் செட்களில்  72ம்நிலை வீரர் ஜோவ் சவுசா(போர்ச்சுகல்)-வை வீழ்த்தியதால் 3வது சுற்றில் விளையாட உள்ளார். இன்னொரு போட்டியில் உலகின் 2ம் நிலை வீரர் ராபேல் நடால்(ஸ்பெயின்), 42ம் நிலை வீரர் ஜெரேமி சார்டி(பிரான்ஸ்) ஆகியோர் விளையாடினர். அதில் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் வென்ற ராபேல் நடால் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags : Italy Open Tennis Osaka ,Federer ,Nadal ,round , Italy Open Tennis, Osaka, Mugurasa, Federer, Nadal, Progress
× RELATED ஆஸி. ஓபன் டென்னிஸ் காயத்தால் விலகினார் நடால்